×

செட்டிநாடு ஸ்பெஷல் கார அடை

கார அடை தயாரிக்க தேவையான பொருட்கள்:

பச்சை அரிசி – 1/4 கப்
புழுங்கல் அரிசி – 1/4 கப்
கடலை பருப்பு – 1/4 கப்
துவரம் பருப்பு – 1/4 கப்
உளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
சமையல் எண்ணெய் – தேவையான அளவு
வெங்காயம் – 1/2 கப்
பச்சை மிளகாய் – 4
கொத்தமல்லி – சிறிதளவு

மசாலா தயாரிக்க தேவையான பொருட்கள்:

கிராம்பு – 6
பூண்டு – சிறியது
காய்ந்த சிவப்பு மிளகாய் – 8
பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி
புளி – 1 நெல்லிக்காய் அளவு
தண்ணீர் – தேவையான அளவு

செட்டிநாடு ஸ்பெஷல் கார அடை செய்முறை:

முதலில் மசாலாவை தயாரித்துக்கொள்ள வேண்டும். அதற்கு மசாலா தயாரிக்க கூறப்பட்டுள்ள கிராம்பு, பூண்டு, காய்ந்த சிவப்பு மிளகாய், பெருஞ்சீரகம், புளி ஆகியவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொஞ்சம் கரடுமுரடாக அரைத்துக்கொள்ளவும். மசாலா தயாரிப்பதற்கு முன்பாக பச்சை அரிசி, புழுங்கல் அரிசி, கடலை பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை கழுவி இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இரண்டும் மணிநேரத்திற்கு பிறகு ஊறவைத்த பொருட்களை கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். அரைத்து வைத்துள்ள மாவுகளுடன் முதலில் அரைத்த காரா மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்றாக கலக்கவும். மாவு தடிமனாக இருந்தால், சிறிது தண்ணீரில் சேர்த்து மாவை மெல்லியதாக மாற்றவும். மாவின் தன்மை இட்லி மாவை விட சற்று தடிமனாக இருக்க வேண்டும். பிறகு மிதமான தீயில் ஒரு தோசைக் கடாயைய் சூடுபடுத்தி, அதில் அரை கப் மாவை ஊற்றி, கடாயில் பரப்பவும். பிறகு அதில் சிறிதளவு எண்ணெய் சேர்த்துக்கொள்ளவும். 30 வினாடிகள் வேகவைத்து பிறகு அடையை மறுபுறம் வேகவைக்கவும். அடையை ஒவ்வொரு பக்கமும் சுமார் அரை நிமிடம் பொன்னிறமாக மாறும் வரை வேகவைக்கவும். இப்போது சுவையான செட்டிநாடு ஸ்பெஷல் கார அடை தயார். காரமான சட்னி அல்லது அவியல் உடன் இதனை சூடாக பரிமாறலாம்.

The post செட்டிநாடு ஸ்பெஷல் கார அடை appeared first on Dinakaran.

Tags :
× RELATED சைனீஸ் காளான் சூப்